By Kavinthan Shanmugarajah
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரிகொல்லி வைரஸ் ஒன்றை கட்டுப்படுத்த முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வைரஸால் பீடிக்கப்பட்ட பாதிக்கும் மேலானோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
தற்போது இவ்வைரஸ் தொடர்பில் விஞ்ஞானிகள் துரிதமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரலில் இருந்து கடந்தமாதம் வரையில் சிவ் வைரஸால் பீடிக்கப்பட்ட சுமார் 13 பேரில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சவுதியைச் சேர்ந்த 6 பேர், ஜோர்தானில் 2 பேரும் மற்றையோர் ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வைரஸ் இது வரை பெயரிடப்படாத போதிலும் சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயை ஏற்படுத்தும் 'கொரோனாவைரஸ்' குடும்பத்தைச் சேர்ந்த வைரஸே இதுவென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சார்ஸை போன்று இவ்வரைஸும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தீவிரம், எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டாரிலிருந்து லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட நபரொருவரிடமே இந் நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்ற வைரஸானது சவூதியைச் சேர்ந்த நோயாளி ஒருவரிடமும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ் பரவுதல் தீவிரமடைந்துள்ளதால் தற்போது இவ் வைரஸ் பற்றி மீண்டும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.
சவுதி அரேபியா மற்றும் ஜோர்தான் இது தொடர்பில் அதிக அக்கறை காட்டவேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அதி தீவிரமான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சின் அதிகாரியான கிவென் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கன் சொசைடி ஒப் மைக்ரோபயலோஜி அமைப்பின் மாநாடொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.
இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.
ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.
சீனாவில் இந் நோய் வேகமாகப் பரவி வந்தபோது அந்நாடு இது குறித்த தகவல்களை வெளியுலகுக்கு மறைத்ததாலேயே மிக விரைவாக சார்ஸ் நோய் உலகெங்கும் பரவியதாக மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டின.(மூலம்:http://www.virakesari.lk/article/technology.php?vid=154 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.