......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள்

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.

ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மூன்றாம் தடவையாகவும் இந்தத் தீர்மானத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக முன்வைக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் கடுமையாக காணப்பட்டதாகவும், மூன்றாம் உத்தேச தீர்மானத்தில் கடுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல நாடுகளின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இவ்வாற தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் மூன்றாவது தடவையாக திருத்தம் செய்யப்பட்ட உத்தேச தீர்மானமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச விசாரணைகள் என முதலில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது நம்பகமான சுயாதீன விசாரணை என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கை தெடர்பான பரிந்துரைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றுதல், உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல், புனரமைப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2013இல் வடக்கில் தேர்தல் நடத்தப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது,



(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3550 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE