இலங்கை விவகாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.
நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது.
இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.
இவ்வறிப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3551 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.