26 வருடங்களுக்கு பின்னர் 9 நீதியரசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தினாலேயே இந்தக்குழு நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது.
ஐந்து அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களையும் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரீட் ஆணைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு ஆகிவற்றை விசாரிப்பதற்கே 9 நீதியரசர்கள் கொண்ட குழாம் ஒன்றை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
மாற்றுக்கொள்கைக்கான நிலையம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் இலங்கை சட்டவுரைஞர்கள் சங்கம் என்பனவும் இதில் மனுதாரர்களாக உள்ளன.
அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரா மேன்முறையீடு செய்வதற்காக விசேட அனுமதி கோரி சுமுது காந்த ஹேவாகே மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுதாரர்கள் நால்வரும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கும் நடவடிக்கைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மாற்றுக்கொள்கைக்கான நிலையம் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதற்கான நியமனத்தை தடுக்கும் கட்டளை ஒன்றைக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேன்முறையீடு செய்வதற்காக விசேட அனுமதிகோரி சுமுது காந்தா ஹேவாகே தாக்கல் செய்த மனுவில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையும் தீர்மானத்தையும் செல்லுப்படியற்றதாக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையை இரத்துச்செய்யுமாறும் கோரியுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விவாதத்தின் போது 9 நீதியரசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் 9 நீதியரசர்கள் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த குழு இன்று காலை 9.30 மணிக்கு கூடவிருக்கின்றது.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60000-26-9-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.