உயிர் தரவுப் பதிவுகளைக் கொண்ட சர்வதேச தரத்திலான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை திணைக்களத்தால் வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறினார்.
கால ஓட்டத்தில் ஒரு மனிதனின் முகத் தோற்றம் மாறுபடுகின்றது. காலத்தால் மாறாத உயிர் தரவுப் பதிவுகளைக் கொண்ட அடையாள அட்டைகளை வழங்கும் வகையில் நாம் 10 வருடங்களுக்கு ஒருமுறை அடையாள அட்டைகளை புதுப்பிக்கவுள்ளளோம் எனவும் அவர் கூறினார்.
ஆட்பதிவுத் திணைக்களம் வருடம் தோறும் ஒரு மில்லியன் தேசிய அடையாள அட்டைகளை வழங்குகின்றது எனவும் இதுவரையில் 70 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60023-10-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.