......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடு திரும்பிய துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர். இந்த பதிவு இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்  சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. 



(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60016-2013-03-05-05-30-57.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE