ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அவரது பிரத்தியேக உதவியாளருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.
இராணுவத்தை விட்டு ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கு தொடுநர் சார்பில் சாட்சியமளிப்பதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான சரத் பொன்சேகா சுகவீனம் காரணமாக நீதிமன்றுக்கு வரவில்லை என நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இந்த வழக்கு விசாரணையை மே மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அன்றையதினம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என அழைப்பாணை விடுத்தார்.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59976-2013-03-04-11-04-17.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.