By Kavinthan Shanmugarajah
தொழில்நுட்ப வசதிகள் சிலவேளைகளில் துரோகம் செய்வோரையும் காட்டி கொடுத்து விடுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலான சம்பவமொன்று ரஸ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஸ்யாவில் யுவதியொருவர் தனது காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக நடந்து செல்வதை கூகுள் மெப்ஸைப் போன்ற சேவையொன்றின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவது.
மரினா வொயினோவா என்ற 24 வயதுப் பெண்ணொருவர் இடமொன்றைத் தேடும் பொருட்டு கூகுள் மெப் சேவைக்கு ஒத்த யாண்டெக் மெப்பினை உபயோகித்துள்ளார்.

இதன்போது அவர் கண்ட காட்சி அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் தனது காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக செல்லும் காட்சியை அவர் அதில் கண்டுள்ளார்.
சுமார் 5 வருடங்கள் தன்னைக் காதலித்த நபர் இவ்வாறு செய்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து தன் காதலன் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் இதனைக் காட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத காதலன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதனையடுத்து மரினா தனது காதலைவிட்டு பிரிந்துள்ளார். முதலில் ஏன் இச்சேவையை உபயோகித்தோம் என வருந்தியதாகவும் ஆனால் பின்னர் தனது காதலின் உண்மையான முகம் வெளியாகியதை எண்ணி ஆறுதல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
யாண்டெக்ஸ் என்பது ரஸ்யாவைச் சேர்ந்தஇணைய நிறுவனமொன்றின் தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இதன் தேட பொறி உலகின் 5 ஆவது மிகப்பெரிய தேடல்பொறியாகும். இது தவிர பல்வேறு இணையம் சார் சேவைகளையும் யாண்டெக்ஸ் நடத்தி வருகின்றது.(மூலம்:http://www.virakesari.lk/article/technology.php?vid=148 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.