......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 23 February 2013

மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்!

By Kavinthan Shanmugarajah மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது,

அமெரிக்காவின் நிவ்யோர்க்கைச் சேர்ந்தவர் நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன் (94), இவரது மனைவி குவண்டோலின் (89).
இவர்  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார்.
http://www.virakesari.lk/image_article/Husband_dies_as_he_arrives_at_late_wife39s_funeral-052032.jpg
இவரது மனைவி பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார்.
இதன்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இதன்பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத்தொடங்கியுள்ளனர்.
பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இருவரும் 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார்.அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வும் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
http://www.virakesari.lk/image_article/couplesadaw.jpg
இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=520 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE