......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

புத்தளம் நகர சபை உறுப்பினர் முஜாஹிதுல்லாவிற்கு விளக்கமறியல்

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.முஜாஹிதுல்லாவை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இவரை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ஹேசான்த டிமெல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தளத்திலுள்ள நகைக் கடையொன்றில் கடமை புரியும் ஊழியர் ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரிலேயே புத்தளம் நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நகரத்திலுள்ள நகைக் கடையொன்றுக்குள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த நகர சபை உறுப்பினர் எம்.முஜாஹிதுல்லாஹ், நகைக் கடையில் கடமையாற்றிய ஊழியரை தாக்கியுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவவம் இடம்பெற்றபோது, குறித்த  நகைக்கடையில் இரு பொலிஸார் சிவில் உடையில் வேறு தேவையொன்றுக்காக சமூகமளித்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அத்துடன், கடையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமராவிலும் இது பதிவாகியுள்ளது என புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து புத்தளம் நகர சபை உறுப்பினர் முஜாஹிதுல்லா இன்று புத்தளம் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/59629-2013-02-26-14-17-23.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE