......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

பாக். உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு: மே விசாரணை

-பாரூக் தாஜுதீன் 

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை கொலை செய்ய முயன்றமை மற்றும் ஏழுபேரை கொலைச்செய்தமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணையை மே மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

குற்றம் சுமத்தப்பட்ட யோகராஜன் நிரோஜன், சுப்பிரமணியம் சுபேந்திரராஜா, கனகரத்னம் ஆதித்தியன் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையே மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க நேற்று அறிவித்தார்.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பஷீர் அலி மொஹமட்டை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது  லான்ஸ் கோப்ரல்கள் நான்கு பேர் உட்பட ஏழு பலியாகினர். கொலை மற்றும் கொலை முயற்சியை முன்வைத்தே  அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59627-2013-02-26-13-19-44.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE