......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

சட்ட அமுலாக்கலில் பாகுபாடு: ஐ.தே.க.

-யொஹான் பெரேரா

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் மகனுக்கு பொலிஸ் பிணை வழங்கியமை குற்றவியல் நடவடிக்கை முறை (விசேட ஏற்பாடு) சட்டத்தை மீறியதாகும் என ஐக்கிய தேசிய கட்சி இன்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்பு ஆணையின்றி 48 மணி நேரம் தடுத்துவைக்க புதிய சட்டம் வகை செய்துள்ளது. எனவே 48 மணி நேரம் தடுத்துவைக்காமலும் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யாமலும் அமைச்சரின் மகனை விடுதலை செய்தமை இந்த சட்டத்தை மீறியதாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

சட்டங்கள் அரசாங்க செல்வாக்குள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரன மக்களுக்கு இன்னொரு விதமாகவும் இந்த அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதை இது உறுதி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59616-2013-02-26-09-29-48.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE