......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

பலஸ்தீன கைதியின் மரணத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது காஸாவிலிருந்து ரொக்கெட் தாக்குதல்

ஜனாதிபதி அப்பாஸின் பதா ஆயுத பிரிவு பொறுப்பேற்பு
இஸ்ரேல் சிறையில் பலஸ்தீன கைதி மரணமடைந்ததற்கு பதிலடியாக பதா அமைப்பின் அல் அக்ஸா ஆயுதக் குழு காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேலுடனான யுத்த நிறுத்தத்திற்கு பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பலஸ்தீன கைதியின் மரணத்தை தொடர்ந்து மேற்குக் கரையில் நீடிக்கும் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காசாவுக்கு பரவும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் சிறையில் இருக்கும் நான்கு பலஸ்தீன கைதிகள் ஒரு சில வாரத்திற்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பதற்றம் தணிவதற்குள் இஸ்ரேல் சிறையில் 30 வயது பலஸ்தீன கைதி கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். இஸ்ரேல் படை மீது கல்வீசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞனே மரணமடைந்தார். இவர் துன்புறுத்தலை தொடர்ந்து கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் குற்றம் சாட்டியது. எனினும் இஸ்ரேல் இதனை மறுத்தது.
இந்நிலையில் கைதியின் மரணம் குறித்து சுயாதீன ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. சபை இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இந்த கைதியின் மரணத்தை அடுத்து பதா அமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மேற்குக் கரை எங்கும் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை மேற்படி மரணமடைந்த பலஸ்தீனரின் இறுதிக் கிரியையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதாஹ் அமைப்பு ஆயுதப் பிரிவான அல் அக்ஸா இந்த மரணத்திற்கு பழி தீர்க்கப்படும் என எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்கு அல் அக்ஸா பொறுப்பேற் றுள்ளது. ‘எமது நாயகனான கைதி அரபாத் ஜரதத்தின் மரணத்திற்கு முதல் கட்ட பதிலடியாக இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறேன்’ என அல் அக்ஸா போராளிக் குழு நேற்று அறிவித்தது.
காசாவில் இருந்து நடத்தப்பட்ட இந்த ரொக்கெட் தெற்கு இஸ்ரேலின் துறைமுக நகரான அஷ்கொலனில் விழுந்துள்ளது. இந்த ரொக்கெட் விழுந்ததில் சேதங்கள் ஏற்பட்ட போதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேல் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த நவம்பரில் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையில் நீடித்த 8 நாள் மோதலுக்கு பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் வன்முறையில் இஸ்ரேல் தாக்குதல்களால் 177 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 6 இஸ்ரேல் நாட்டவர்களும் பலியாயினர்.

(மூலம்:http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302272 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE