கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மைய இடதுசாரி கூட்டணி பாராளுமன்ற மேலவையில் சிறு இடைவெளியில் வெற்றியீட்டியுள்ளதோடு, முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மைய வலதுசாரி கூட்டணி செனட் சபையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே அங்கு மேலும் அரசியல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மைய இடதுசாரி கூட்டணி பாராளுமன்ற கீழவையில் 29.54 வீத வாக்குகளை வென்று முன்னிலையில் உள்ளபோதும் பெர்லுஸ்கோனியின் கூட்டணி 29.18 வீத வாக்குகளை வென்றுள்ளது. ஆனால் செனட் சபையில் பெர்லுஸ்கோனியின் கூட்டணி 31.63 வீத வாக்குகளை வென்று முன்னிலை பெற்றுள்ளதோடு, மைய இடதுசாரி கூட்டணி 30.72 வீத வாக்குகளை வென்றுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு விரைவில் மற்றொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302271 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.