......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 February 2013

புனர்வாழ்வு பெறாத ஆறு பேர் திருமலையில் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு பெறாதவர்கள் என இனங்காணப்பட்ட 6 பேர் செவ்வாயன்று மூதூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து வந்த விஷேட குழுவொன்று குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டுக்கு பல நாட்களாகச் சென்று தகவல்களை பெற்று வந்ததாகவும், பின்னர் செவ்வாயன்று இவர்கள் அனைவரும் மூதூர் பிரதான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் கிழக்கு, மூதூர் தெற்குப் பிரதேசங்களில் இருந்தே இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு பேரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டித்திடல் முகாம், கிளிவெட்டி முகாம், இலிங்கபுரம், மல்லிகைத்தீவு, கட்டைபறிச்சான் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த 6 பேரே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து உறவினர்கள் திருமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE