......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

ஈரான் - சர்வதேச சக்திகளுக்கு இடையில் கஸகஸ்தானில் சந்திப்பு

ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய அணு செயற்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை கஸகஸ்தானின் அல்மாடி நகரில் நேற்று ஆரம்பமானது.

ஈரானின் அணு செயற்பாடு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூனில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வி யடைந் ததைத் தொடர்ந்து இரு தரப்பும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன்போது ஈரான் தனது அணு செயற்பாடு குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முற்படுவதாக சர்வதேச சக்திகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, இதனை ஈரான் திட்டவட் டமாக நிராகரித்துள் ளது. தாம் சிவில் தேவைக்காகவே யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடுவதாக ஈரான் கூறியுள்ளது.
எனினும் ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருவதால் அதனது பொருளா தாரம் மற்றும் எண்ணெய் வருவாய் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் கஸகஸ்தான் சந்திப்பில் தீர்வொன்றை எட்ட சர்வதேச சக்திகள் எதிர்பார்த்துள்ளன.

(மூலம்:http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302276 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE