பாகிஸ்தானின் மார்தான் மாவட்டத்திலுள்ள கஹொகலின் கிராமத்தில் போலியோ மருந்து வழங்கும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் கராச்சியில் போலியோ மருந்து வழங்கிய 8 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். உலகில் போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளாக தற்போது ஆப்கானிஸ்தான், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளே எஞ்சியுள்ளன. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் அமைப்பு போலியோ தடுப்பு செயற் பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. இந்த போலியோ தடுப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவாளிகள் செயற்படுவதாக தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302277 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.