கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்து வெடித்துச் சிதறிய எரிகல் தொடர்பில் பெறப்பட்ட பல்வேறு வீடியோ ஆதாரங்கள் கொண்டு கொலம்பியாவின் வானியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவு இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது இந்த எரிகல் தொடர்பில் கையடக்கத் தொலைபேசி கெமரா, சி. சி. டி. வி, கார்களில் பொருத்தப் பட்டிருக்கும் கெமரா ஆகியவற்றினூடே பிடிக்கப்பட்ட படங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த விண்கல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் வானியலா ளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதில் எரிகல்லின் வந்த வேகம், உயரம், இடம் என்பன பற்றி ஆராயப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விண்கல் தொடர்பில் அமெரிக்க கடற்படை அவதான நிலையத்தால் தயாரிக்கப் பட்ட மென்பொருளைக் கொண்டு இந்த எரிகல்லின் அசல் சுற்றுப்பாதையை கட்டமைத்துள்ளனர்.
இதன்மூலம் இந்த எரிகல் அப்பல்லோ விண்கல் கூட்டத்தைச் சேர்ந்தது என வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமிக்கு அருகால் மிதந்து கொண்டிருக்கும் சுமார் 9,700 விண் கற்களை வானியலா ளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த விண் கற்களை வானியலாளர்கள் அப்பல்லோ, அடன் அல்லது அமெரர் என பல்வேறு கூட்டங்களாக பிரித்துள்ளனர். விண்கற்களின் தன்மை அதன் சுற்றுப்பாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இவை பல்வேறு கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அப்பல்லோ விண்கல் கூட்டத்தில் சுமார் 5,200 விண்கற்கள் அளவு இருப்பதாக நம்பப்படுகிறது.(மூலம்:http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302278 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.