அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து , நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்டவர் வருவது நமது நாட்டிற்கே கேடு.
உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்தகயா,சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சை போதிபதற்கு இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பித்தார்.
அப்பேர்ப்பட்ட இந்த மண்ணில் தான் , நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்தவர் வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து புத்தகயாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளோம்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.