இது தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று இலங்கையின் 65-வது சுதந்திர தின விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பின்பும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்ற பல முறை அளித்த உறுதிமொழியை அவர் மீறியிருக்கிறார். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் கேடு விளைவிப்பதாகும்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவதும், தமிழர்களின் இன, மொழி கலாசாரத்தின் தனித்தன்மையை காப்பதும், சம அந்தஸ்து அளிப்பதும் தான் இணக்கமான சூழல் உருவாக அடிப்படைத் தேவையாகும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த இலங்கை அரசு இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக உரிமை களுக்காவும், வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.