......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 7 February 2013
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது : ரணில் குற்றச்சாட்டு
By J.Stephan 10 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது இது வரை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெவ்வேறு இடங்களில் 10 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,
அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற சம்பவங்களில் ஒன்று மட்டுமே இதுவாகும் இதுவரையில் பள்ளிவாசல்கள் மீது 10 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வெ;வேறு இடங்களில் 10 ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.
மேலும் ஹலால் சான்றிதழ் குறித்த பிரச்சினை ஒன்றும் இங்கு எழுந்திருக்கின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஹலால் சான்றிதழ் என்பது முழுக்க முழுக்க தன்னார்வ விடயமாகும். வியாபார அமைப்புக்கள் மீது யாரும் ஹலால் சான்றிதழை பலவந்தமாக திணிப்பார்களானால் அது குறித்து முறைப்பாடுகள் வரின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளை, எஸ்.எல்.ஐ.எஸ். இன் பொறுப்புக்குரிய இந்த சான்றிதழ் விடயத்தை தனியாருக்கு வழங்கியது ஏன் என்பதை அரசாங்கம் இங்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.