......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 7 February 2013
முரணான தகவல்கள் காரணமாகவே விசா நிராகரிப்பு: வெளிவிவகார அமைச்சு
By Kavinthan Shanmugarajah சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசா விண்ணப்பத்திரங்கள் ஆகியவற்றில் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் முரண்பாடான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, பத்திரிக்கைகள் ஊடாகவே தான் சர்வதேச சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் விசா நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அறிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் தனக்கு மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லையெனவும், விஜயத்திற்கான காரணம் தொடர்பில் முரணான தகவல்கள் வழங்கப்பட்டமையே விசா நிராகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை நீதித்துறையில் தற்போதைய நிலை தொடர்பில் அவதானிப்புகளை மேற்கொள்ளல், பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழிமுறைமை தொடர்பில் ஆராய்தல் போன்றவையே தாம் விஜயம் மேற்கொள்ள இருந்தமைக்கான முக்கிய காரணங்கள் என குறித்த குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.