எம்.எஸ். பாஹிம்
* முதற்கட்டமாக 40 ஏக்கர் காணி ஒதுக்கீடு
* பின்னவலவில் சிங்கம், புலிகள் சுதந்திரமாக நடமாடும் சஃபாரி
* பின்னவலவில் சிங்கம், புலிகள் சுதந்திரமாக நடமாடும் சஃபாரி
இலங்கையின் இரண் டாவது தேசிய மிருகக் காட்சி சாலை கெஸ்பேவ பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 40 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அமைச்சு தெரிவித்தது.
இது தவிர பின்னவலயில் மிருக சஃபாரியொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுது போக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜயரத்ன ஹேரத் நேற்று தமது அமைச்சுப் பதவியை உத்தியோகபூர்வமாக கையேற்றார். இதனையொட்டி இடம்பெற்ற விழாவின் போதே மேற்படி திட்டங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் விலீ கமகே தெரிவித்தார்.
புதிய அமைச்சர் பதவிஏற்கும் நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, தயாசித் திசேர ஐ.தே.க. எம்.பி. அசோக அபேசிங்க அடங்கலான பல எம்.பிக்கள் மாகாண உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஜயரத்ன ஹேரத், மக்களால் உணரக் கூடிய விதத்தில் மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை முன்னெடுக்கவும் சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு பங்களிக்கும் திட்டங்களை அமுல்படுத்தவும் உள்ளதாக குறிப்பிட்டார். இந்த அமைச்சுப் பொறுப்பை வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இங்கு உரையாற்றிய அமைச்சின் செயலாளர் விலீ கமகே, யுத்தத்திற்கு முடிவு காணப்பட்ட பின் சுற்றுலாத்துறையையும் பொழுது போக்குத்துறைகளையும் மேம்படுத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார். தற்பொழுது இது தொடர்பான பொறுப்புகளுக்கு தனி அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு பொழுது போக்கு வசதிகளை அதிகரிக்கவும் சுற்றுலாத் துறைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் வேண்டிய பொறுப்பு இவ்வமைச்சிற்கு உள்ளது. நாட்டில் தாவரவியல் பூங்காங்களை விஸ்தரிக்கவும் புதிதாக மிருகக் காட்சி சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதன்படி அவிஸ்ஸாவெலயில் புதிதாக தாவரவியல் பூங்காவொன்றை அமைக்கவும் கெஸ்பேவவில் புதிதாக மிருகக் காட்சி சாலையொன்றை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக் காட்சி சாலையை விஸ்தரிக்க முடியாததால் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி கொழும்பிற்கு அருகில் மற்றொரு மிருகக் காட்சிசாலை அமைக்கவுள்ளோம். இதற்கு 40 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. அருகிலுள்ள காணிகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அருகில் சஃபாரியொன்றை அமைக்கும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் சதந்திரமாக நடமாட விடப்படும். இதற்காக 70 ஏக்கர் காணி ஒதுக்கப்பட உள்ளது என்றார். இந்த வைபவத்தில் அமைச்சர்களான எஸ். பி நாவின்ன தயாசித் திசேரா ஆகியோரும் உரையாற்றினர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.