......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 February 2013

பாவனைக்குதவாத ஆரெஞ்சு பழங்கள் முற்றுகை


* 300 பெட்டிகள் மீட்பு
* பெறுமதி ரூ. 5 இலட்சம்
* கண்டியில் 7பேர் கைது
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மனிதப் பாவனைக்கு உதவாத 300 ஆரெஞ்சு பெட்டிகள் கண்டி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை விற்பனை செய்து வந்த பிரதான சந்தேக நபர் அடங்கலாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளோடு அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.
கண்டி பொலிஸ் விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த தகவலின்படி கண்டி நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
பஸ்களிலும் பஸ் தரிப்பிடங்களிலும் பாவனைக்கு உதவாத அழுகிய பழங்கள் அடங்கிய ஆரெஞ்சு பைகளை விற்றுவந்த மூன்று நடமாடும் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டதாக கண்டி நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் நிசாந்த தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி பாவனைக்கு உதவாத ஆரெஞ்சுப் பழங்களை பொதி செய்யும் களஞ்சியம் சுற்றிவளைக்கப்பட்டது.
இங்கிருந்து பாவனைக்கு உதவாத ஆரெஞ்சு பழங்கள் அடங்கலான 300 பெட்டிகள் மீட்கப்பட்டன. பிரதான சந்தேக நபரின் வீட்டிலிருந்தும் ஆரெஞ்சு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 7 பேரும் இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE