......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை: பஷீர்

-றிப்தி அலி

"கட்சியை அழிக்கும் நோக்கிலேயோ அல்லது கட்சியை பிளவுபடுத்தும் நோக்கிலோயோ ஒருபோதும் நான் செயற்படவில்லை. கட்சியை ஒருபோதும் நான் காட்டிக்கொடுக்கவும் இல்லை" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் கட்சிக்குள் சர்சை நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூர் தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் இணைத் தலைவர்களாக இருந்தவர்கள் மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்துள்ளனர். ஏனைய சந்தர்ப்பங்களில் தலைவர் மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்லாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைந்துள்ளேன். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை நான் பெற்றுக்கொண்டதன் ஊடாக கட்சியை ஒருபோதும் நான் காட்டிக்கொடுக்கவில்லை. இந்த கட்சியை அழிக்கும் நோக்கிலேயே அல்லது கட்சியை பிளவுபடுத்தும் நோக்கிலோயோ ஒருபோதும் செயற்படவில்லை. 

சிக்கலான பல சந்தர்ப்பங்களில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரதி அமைச்சர் பதவி ஆகியவற்றை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்கு வழங்கியுள்ளார். இதனை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

கே.டப்ளியூ.தேவநாயகம், செல்லையா இராஜதுரை ஆகிய இருவர் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்துள்ளனர். எனினும் மட்டு. மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள முதல் முஸ்லிம் என்ற பெருமையை பெற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின்  அடிப்படையிலே இந்த அமைச்சர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை மாற்ற நிகழ்வில் என்னையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் தலைவர் நாட்டில் இல்லாததானால் கட்சியின் பொது செயலாளரிடம் நான் அறிவித்துவிட்டே ஜனாதிபதி செயலகம் சென்றேன்" என்றார்.

இதன்போது, உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சராக பஷீர் சேகுதாவூத் பதியேற்றமையை கண்டித்து வாழ்த்துகின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சராக பஷீர் சேகுதாவூத் பதியேற்றமைக்கு எதிராக இந்த கூட்டத்தில் அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல எதிர்பார்த்திருந்த நிலையிலேயே நேற்றைய கூட்டம் இடம்பெற்றது. எனினும் அமைச்சர் பஷீர் சேகுதாவூதிற்கு எதிரான ஒழுகாற்று நடவடிக்கை தொடர்பில் எதுவுமே பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைருக்கு மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்குவது என்ற பாரம்பரியத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் மீறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவசாளர் பஷீர் சேகுதாவூத்திற்கு அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




(tamilmirro)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE