......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபாரிகள் கண்ணீரால் வரையும் காவிய மடல்


batti_market_people_001‘மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபாரிகள் கண்ணீரால் வரையும் காவிய மடல்” எனும் தலைப்பில் மட்டு.நகர் பொதுச்சந்தை வியாபாரிகள் துண்டுப்பிரசுரம்  மூலம் தமது வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் போன்றோருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ள  அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார ரீதியாக மகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்பதனை மகவும் மனவேதனையுடனும் கவலையுடனும் அறியத்தருகின்றோம். இதற்கு முக்கிய காரணம வீதி வியாபாரம். இவ்வீதி வியாபாரம் சம்பந்தமாக நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதனை தங்களுக்குத் தெரியத் தருகின்றோம்.
1999 ஆம் ஆண்டு தொடக்கம் பலவிதமான போராட்டங்கள் செய்து 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முன்னாள் மாநாகர ஆணையாளர் நவநீதன் அவர்களால் சட்டரீதியாக 13 வீதிகளில் வர்த்தமானி மூலம் வீதி வியாபாரம் மாநகர சபை எல்லைக்குள் வீதி வியாபாரம் செய்தல் முற்றாக தடை விதிக்கப்பட்டது. இது நடைமுறையில் அமுல்ப்படுத்தப்பட்டது.
சுனாமி அனர்த்தத்தின் பின்பு மீண்டும் இவ்வீதி வியாபாரம் நடைபெறத் தொடங்கியது. மாநகர சபை நிர்வாகத்தனால் விலக்கச் செய்யப்பட்ட வீதி வியாபாரிகளிடம் தண்டப் பணம் மாநகர சபையினால் அறவிடப்பட்டது.அவர்களின் கவலையீனத்தினால் வீதி வியாபாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நாம் மீண்டும் பல போராட்டங்களைத் தொடங்கினோம். மாநகரசபை நிர்வாகத்திடம் நேரடியாகவும் கடிதம் மூலமும் எத்தனையோ தடவைகள் எடுத்துக்கூறியும்கூட எதுவிதமான ஒரு நிரந்தர நடவடிக்கையும் நிர்வாகத்தினால் மேற்காள்ளப் படவில்லை என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
2010ம் ஆண்டு பங்குனி மாதம் நாம் வீதி வியாபாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் கடையடைப்புச் செய்தோம் இதன் காரணமாக மாநகரசபை நிர்வாகம் பொலிஸாரின் உதவியுடன் காரியாலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தின் மத்தியில் வீதி வியாபாரத்தை நிறுத்துவதாக பொலிஸ் அதிகாரி முன்னிலையில் உறுதிமொழிகூறி பொலிஸ் அத்தியட்சகர் அவர்கட்கு கடிதம் மூலம் அறியத்தந்தது.
அதன் பின்பு வீதி ரோந்து செல்லும் பொலிஸ் அதிகாரிகளிடம் இதனை தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஒரு மாத காலம் தொடர்ந்த அமுல் படுத்தப்பட்டது. அதன் பின்பு வீதி வியாபாரம் மீண்டும நடைபெறத் தொடங்கியது.
மாநகர சபை நிர்வாகம் அவர்களுக்கு குத்தகைப் பணம் அறவிட்டு பற்றுச்சீட்டு வழங்கியது. ரோந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் பற்றுச்சீட்டைக் காட்டுவதனால் தங்களால் எதவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதனை கவலையுடன் தெரிவித்தார்கள்.
ஆகவே மாநகரசபை நிர்வாகமே!உத்தரவைப் பிறப்பித்து ஒரு மாத்ததிற்குள் உத்தரவிற்கு மாறாக செயற்பட்டால் நாம் இது பற்றி யாரிடம் நியாயம் கேட்பது?
2011ம் ஆண்டு கிழக்கு மாகணசபை முதலமைச்சர் செயலகத்திற்கு இவ்விடயம் சம்பந்தமாக கடிதம் மூலம் பல தடவைகள் அறிவித்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் எடுத்த நடவடிக்கைகளில் சுருக்கம் பின்வருமாறு.
1999ம் ஆண்டு தொடக்கம்2000ம் ஆண்டு காலப்பகுதியில் அதாவது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், அமைச்சர் கிங்ஸ்லி விக்ரமரத்ன, மாகாணசபை ஆளுனர்,  முன்னாள் மாகாணசபை உள்ளூராட்சி ஆணையாளர்,அவர்களுக்கு எழுத்து மூலமாக நாங்கள் ஒரு கடிதம் அறிவித்துள்ளோம்.
அதன் பின்பு2003ம் ஆண்டு முன்னாள் மாகாணசபை உள்ளூராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமி அம்மையாரிடம் எமது பிரச்சினையை அறிவித்துள்ளோம். அதற்கு அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக 2004ம் அண்டு மார்ச் மாதம் 27ம் திகதி மாநகரசபை நிர்வாகத்தினால் வீதி வியாபாரம் தடை செய்யப்பட்டது.
அதன்பின்பு 2006ம் ஆண்டு தொடக்கம் இவ்வீதி வியாபாரம் காரணமாக பல தடவைகள் மாநகர சபை நிர்வாகத்திடம் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் உரையாடியுள்ளோம். ஆனால் அதிலும் எங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. அதன் பின்பு 2011 ஆம் அண்டு பங்குனி மாதம் வீதி வியாபாரம் முற்றாக நிறுத்தாவிடின் நாங்கள் நாளாந்தம் செலுத்தும் வரிப்பணத்தை நிறுத்த முடிவு செய்து நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் கையொப்பமிட்டு மாகாணசபை, ஆளுனர், ஆகியோருக்கு அறிவித்தோம்.
அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு இராணுவத்தினரைக் கொண்டு வீதி வியாபாரம் முற்றாக ஒரு மாதமாக தடை செய்யப்பட்டது.மாகாணசபை ஆளுனர், மாநகர சபை நிர்வாகத்திடம் அது பற்றி விளக்கம் கூறி இருந்தார்.
இதற்கு மட்டு.மாநகரசபை நிர்வாகம் மாநகர சபை எல்லைக்குள் வீதி வியாபாரத்தை முற்றாக நிறுத்தி விட்டதாக முதலமைச்சர் செயலகத்திற்கும் ஆளுனர் அவர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஐயா, வீதிக்கு வீதி வாகனங்களிலும், நடைபாதைகளிலும், மரக்கறி முதற்கொண்டு மீன், தேங்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்வதால் இந்த பொதுச் சந்தையில் நுற்றுக்கணக்கான வியாபாரிகள் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதுடன் நாளாந்த ஜீவியத்தை நடத்த முடியாமல் கேள்விக்குறியாகி நிற்கின்றார்கள்.
மேலும் மீன் வியாபாரம் சந்தையின் மேல் மாடிக்கு கொண்டு சென்றதனால் சந்தை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது அதாவது வயது முதிந்தவர்கள் கால்களில் நடக்கமுடியாதோர், பெண்கள் போன்றோர் மேலே சென்றுமீன் வாங்க சிரமம் படுகின்றார்கள்.
பெரும்பாலும் சந்தைக்கு வருவதையே தவிர்க்கின்றார்கள் அதனால் மீன் வியாபாரம் குறைய, பல மீன் வியாபாரிகள் நஸ்டமடைந்து சந்தையை விட்டு வெளியெறியுள்ளார்கள்.
மேலும்01.01.2013 தொடக்கம் இறைச்சிக்கடையை மேல் மாடிக்கு மாற்றி விட்டார்கள் இறைச்சிக் கடைக்கு நாம் வேறாகச் சொல்லத் தேவையில்லை. இதனால் வியாபாரம் குறைந்து கொண்டு போகின்றது. அத்துடன் வியாபாரம் முடிய கழுவி விடும் தண்ணீர் சந்தையின் முன்பக்கமாக விழுவதனால் கீழே உள்ள கடைக்கு துர்நாற்றம் வீசுவதோடு எல்லா இடமும் பரவுவதாகவும் குறை கூறிக் கொள்கின்றார்கள்.
ஆகவே தயவு செய்து மீன் இறைச்சி போன்ற கடைகளை சந்தையின் கீழ் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது எங்கள் பணிவான வேண்டுகோளாகும்.
அன்பானவர்களே! தங்களிடம் நாம் மீண்டும் கேட்பது  வியாபரிகளின் நலன் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு பொதுச்சந்தை மக்களுக்கு நீதியானதுமான நியாயமானதுமான நல்லதோர் முடிவினை பெற்றுத் தருமாறு வியாபாரிகளாகிய நாங்கள் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி மிகவும் பணிவுடனும் தாழ்மையுடனும் கேட்கின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் இவ்விடயம் தொடர்பாக ஒரு விசாரணை நடைபெறுமானால் பொதுச்சந்தை வியாபாரிகளாகிய நாம் சமூகம் கொடுக்க தயாராகவுள்ளோம் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றோம் எனவும் அதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
batti_market_people_001
batti_market_people_002



(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE