......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

சனிக்கிரகத்தில் பாரிய புயல் அவதானிப்பு


சனிக்கிரகத்தில் இடி, மின்னலுடன் கூடிய பாரிய புயல் ஒன்றை நாஸா விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.

சனிக்கிரகத்தை சுற்றி வரும் நாஸாவின் கஸினி செய்மதி இந்த புயலை அவதானித்துள்ளது. இந்த புயல் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான 267 தினங்கள் நீடித்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எமது சூரிய குடும்பத்தில் இவ்வாறான பாரிய புயல் ஒன்று அவதானிக்கப்பட்டது இதுவே முதல் முறையென நாஸா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு புயல் பூமியில் தோன்றினால் 150 தினங்களுக்குள் பூமியின் முழு நிலப்பரப்பையும் அழித்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் பூமியில் தோன்றும் பாரிய புயல் மலை போன்ற நிலப்பிரதேசங்களை தாண்டும் போது அதனது சக்தி குறைக்கப்படுகிறது.
ஆனால் சனி கிரகத்தில் இவ்வாறான நிலப்பகுதி இல்லாததால் அங்கு தோன்றும் புயல்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடியதாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE