பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் அணியும் உடையான கால்சட்டை அணிவதற்கு கடந்த 1800 ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
பெண்கள் கால்சட்டை அணிய விரும்பினால் நகர பொலிஸாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இந்த சட்டம் அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. பாரிஸ் நகர பெண்கள் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந் நிலையில் 200 ஆண்டுகளுக்கு பின் ஒரு வழியாக இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரான்சின் பெண்கள் உரிமை துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெலகாசெம் தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.