......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 11 February 2013

மகளிர் உலக கிண்ணம் : ஆஸியிடம் தோற்றதால் இலங்கையின் உலகக் கிண்ணக் கனவு தகர்ந்தது


இலங்கைக்கு எதிரான பெண்கள் உலகக் கிண்ண சுப்பர்-6 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதையடுத்து இலங்கையின் உலகக் கிண்ணக் கனவு தகர்ந்தது.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 10ஆவது, பெண்கள் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்று வருகின்றன. இன்று, மும்பையில் நடந்த சுப்பர்-6 சுற்றுப் போட்டியில் இலங்கை - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அந்த வகையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுக்கத் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தீபிகா ரணசிங்க மாத்திரம் நிதானமாக துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ஆஸி. சார்பாக எரின் ஒஸ்பேர்ன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
132 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மெங் லனிங் 37 ஓட்டங்களையும் ரச்செல் ஹெய்ன்ஸ் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதையடுத்து அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இப் போட்டியின் ஆட்டநாயகியாக அவுஸ்திரேலிய அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய எரின் ஒஸ்பேர்ன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதிக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு தகர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




(http://www.virakesari.lk/article/sports.php?vid=481)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE