ஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் அப்சல்குரு எனப்படும் முகம்மது அப்சல்குரு அப்சல்குரு. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் ஆண்டு எம். பி. பி. எஸ்.
படிப்பை முடித்த இவர் ஐ. ஏ. எஸ். தேர்விற்காக தன்னை தயார் செய்து வந்தார். பின்னர் ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்த இவர் பயங்கரவாத பயிற்சிகள் சிலவற்றை பெற்றார்.
சுயதொழில் செய்து வந்த இவர் பயங்கரவாத தலைவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி நீதிமன்றம் அப்சல்குருவிற்கு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
பின் 2003ல் டில்லி உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இறுதியாக உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். 2006 முதல் நிலுவையில் இருந்த கருணை மனுவை பெப்ரவரி 3 ஆம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
சட்ட ரீதியான நடவடிக்கை களாலேயே அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்று வதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக வும், மற்றபடி, அரசியல் உள்நோக்கம் இதில் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(http://www.thinakaran.lk/2013/02/11/?fn=i1302112)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.