......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

மக்களின் பொருளாதார சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு : ஐ.தே.க.

நாட்டில் முறையான சட்டமில்லை. பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாயின் கூட்டுத்தாபனத்திற்கு ஏன் அமைச்சர்கள், அதிகாரிகள் என நாம் கேள்வியெழுப்புகின்றோம்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டம் என்பதே இல்லை. காட்டுமிராண்டித்தனமான ஆட்சியே நடைபெற்று வருகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டத்தை அரசு தனது ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கொண்டு செல்கின்றது.
இதேவேளை, பொருட்களின் விலைகள் ஒவ்வொரு இரவும் அதிகரிக்கப்படுகின்றன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன. அவ்வாறெனில் அக் கூட்டுத்தாபனத்திற்கு ஏன் அமைச்சர்கள், அதிகாரிகள் என நாம் கேள்வியெழுப்புகின்றோம்.

இவ்வாறான அரசை விரட்ட வேண்டுமெனில் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3214 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE