......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

எகிப்தில் பலூன் விபத்து: 18 பேர் பலி

எகிப்தின் லக்ஸர் நகரில் வெப்பக்காற்று நிரம்பிய பலூன்  நடுவானில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பலூன் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் காற்றுப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் மின்னல் வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்த பலூன், அல்-தாபா கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் விழுந்தது.
இதில், பலூனில் பயணம் செய்த பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த 18 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.

 சுற்றுலாப் பயணிகள் இருவர் மற்றும் ஒரு எகிப்தியர்  பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எகிப்தில் சுற்றுலாப் பயணிகள் சந்தித்த மிக மோசமான விபத்துகளில்  ஒன்று இது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


(மூலம்:http://www.virakesari.lk/article/world.php?vid=526 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE