By Kavinthan Shanmugarajah ஈரானின் போட்டோ சொப் திறன் தொடர்பில் அண்மையில் நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம்.
தனது உள்நாட்டு தயாரிப்பான Qaher-313 என்ற போர் விமானம் பறப்பது போன்று போட்டோசொப்பில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது முதல் ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் மாதிரி விமானத்தினை தனது சொந்த தயாரிப்பு எனக் கூறி வெளியிட்டது வரையான தகவல்கள் அச்செய்தியில் உள்ளடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஈரான் தனது போட்டோசொப் திறனை காட்டியிருப்பது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் ஆடையில்.
ஆம், மிச்செல் ஒபாமா ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் பலரும் எதிர்ப்பார்க்காத வகையில் இணையமூடாக வெள்ளைமாளிகையிலிருந்து நேரடியாகத் தோன்றி ' Best Picture' விருதினைஅறிவித்தார்
இதன்போது அவர் அணிந்திருந்த ஆடை சற்று கவர்ச்சிகரமாக காட்சியளித்தது. அவரது ஸ்லீவ் லெஸ் ஆடையில் நெஞ்சுப் பகுதியும் சற்று அதிகமாகவே தெரியும் வகையில் தோன்றியிருந்தார்.
இந்நிலையில் ஒஸ்கார் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ஈரானின் பார்ஸ் செய்திச் சேவையின் இணையத்தளம் மிச்செலின் ஆடையில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.
மிச்செல் ஒபாமா உண்மையில் தோன்றிய விதம்

ஈரானிய ஊடகம் மாற்றங்களை மேற்கொண்டதன் பின்னர் அப்புகைப்படம்.

புகைப்படம் சற்று கவர்ச்சியாக இருந்தமையினாலேயே இம்மாற்றத்தை ஈரான் தனது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவகையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
எனினும் ஈரானின் இந்நடவடிக்கை தொடர்பில் சற்று பரபரப்பாக பேசப்படுகின்றது. அமெரிக்க முதல் பெண்ணின் ஆடையிலேயே ஈரான் கைவைத்து விட்டதாக நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.(மூலம்: http://www.virakesari.lk/article/technology.php?vid=150 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.