......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

மகளிர் உலகக் கிண்ணம் : மே.இந்திய அணியை வீழ்த்தியது இந்தியா


By V.Priyatharshan மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பத்தாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் ஆரம்பமாகியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதின.
இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணிக்கு பூனம் ராத், திருஷ் காமினி முருகேசன் ஜோடி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தது.
சிறப்பாக ஆடிய பூனம் ராத், ஒரு நாள் அரங்கில் 6ஆவது அரைச் சதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், பூனம் ராத் (72) ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.
பின் வந்த கோஸ்வாமி, தாலே மற்றும் அனிஷா முகமது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்த காமினி (100) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
கோஸ்வாமி 21 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்தார். பின் வந்த ஹர்மன்பிரீத் கவுர் (36) ஆறுதல் தந்தார். மல்கோத்ரா (3), நிரஞ்சனா (2) நிலைக்கவில்லை. இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது. அமிதா சர்மா(8), அணித் தலைவி மிதாலி ராஜ் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக டாட்டின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. அணிக்காக ஓட்டக் கணக்கை ஆரம்பிக்கும் முன்பே, கைசியா நைட் "டக் அவுட்டானார். ஸ்டெபானியே டெய்லர் (9), கைசோனா நைட் (11) ஏமாற்றினர்.
கேம்பெல்லே 21 ஓட்டங்களை எடுத்து நிரஞ்சனா வேகத்தில் வீழ்ந்தார். தொடர்ந்து அசத்திய இவர், டாட்டின் (39), அகுலெய்ரா (18) இருவரையும் வெளியேற்ற, இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
தாலே 28 ஓட்டங்களை எடுத்து அரங்கு திரும்பினார். சற்று தாக்குப்பிடித்த குயின்டைன் 17 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்மார்ட் (6), செல்மான் (2) இருவரையும் கோஸ்வாமி திருப்பி அனுப்ப, மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்று 105 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்தியா சார்பில் நிரஞ்சனா 3, கோஸ்வாமி, சுல்தானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE