......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

கிழக்கு முதலமைச்சர், கல்முனை மேயர் ஆகியோரின் ஈரான் விஜயம் இரத்து

-றிப்தி அலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் ஈரானுக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர்.

எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கிழக்கு முதலமைச்சரின் ஈரானுக்கான விஜயம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த இரத்து செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் பொதுபலசேன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் முறையிடவே முதலமைச்சரின் விஜயம் அமைவதாக பல சர்ச்சைகள் வெளியாகும் என்பதாலும் இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே கிழக்கு முதலமைச்சரின் ஈரான் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளவிருந்த முதலாவது  வெளிநாட்டு விஜயமே இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபின் ஈரான் விஜயம் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேயரின் ஊடக பிரிவு தெரிவித்தது.

ஈரானில் தலைநகரனா தெஹ்ரான் மேயரின் அழைப்பினையேற்றே மேயர் அங்கு செல்லவிருந்தார். எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் ஓத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மேயரின் ஊடக பிரிவு, மீண்டும் எப்போது இந்த விஜயம் இடம்பெறும் என்பது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. 

இதேவேளை, கல்முனை மேயருடன் கிழக்கு முதலமைச்சர் ஈரான் விஜயம் மேற்கொள்கின்றார் என மேயரின் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் முதலமைச்சர் செயலகம் மேயரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஈரானுக்கு விஜயம் செய்யவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59475-2013-02-24-06-11-22.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE