......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

கச்சதீவு உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இம்முறை கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,
இந்தியாவிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் அங்கு வருகை தந்திருந்தனர். இந்தியாவிலிருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களே கலந்து கொண்டனர்.
இதேவேளை, இவ் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றன யாழ்ப்பாணம் அரச செயலக அதிகாரிகளாலும் நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஏற்பாடுகளுக்கு இலங்கை கடற்படையினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அதேவேளை, பொலிஸார் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3181 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE