இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதிகள் தாமாக விரும்பி திரும்புவதற்கான இரண்டு அமைச்சு குழுக்களை இலங்கையும் இந்தியாவும் அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை அகதிகள் தாமாக திரும்புவதை ஊக்குவிக்கும் இரு பக்க கலந்தாலோசனை செயன்முறையொன்று, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் பல்வேறு ஊக்குவிப்புக்களை வழங்கியபோதும் பல்வேறு கட்டங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 68,000 இலங்கை அகதிகள் தற்போதும் தமிழ் நாடு முகாம்களில் வாழ்கின்றனர்.
இதற்கு மேலாக சுமார் 30,000 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இது சுயவிருப்பின் அடிப்படையிலான ஒரு செயன்முறை என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசொன்றை நாம் செயற்படுத்துகின்றோம் என இலங்கை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு திரும்பும் அகதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் விமானக் கட்டணத்தையும் வாழ்வாதார உதவிகளையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58702-2013-02-11-11-11-17.html)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.