......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

காத்தான்குடியில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் பள்ளிவாசல்

காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்க செலவில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.


இந்த பள்ளிவாசலின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் ஊடாக 87 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமரும் மத விவகார அமைச்சருமான தி.மு. ஜயரட்னவின் ஆலோசனைக்கமைய அமைக்கப்படவுள்ள இந்த பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத் மற்றும் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ள மத்திய பொறியியல் கட்டிட நிர்மாணப் பணியகத்தின் தலைவர் நிஹால் ரூப்பசிங்ஹ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.


(http://www.virakesari.lk/article/northeast.php?vid=115)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE