அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிர தான வீதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் பல கடைத் தொகுதிகள் சேதமடைந்துள்ளன.
இச் சம்பவம் மாலை 3.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இடி, மின்னலுடன், கடும் மழை பெய்த வேளை, குறுகிய நேரத்திற்கு மினி சூறாவளி வீசியது. இதனால் பிரதான வீதியிலுள்ள பழக் கடைகள், கணனி நிலையங்கள், வாகனம் பழுது பார்க்கும் நிலையம், அரிசி ஆலை ஆகியவற்றின் கூரைகள் பறந்து சென்றுள்ள நிலையில் இவை சேதமடைந்துள்ளன.
(http://www.thinakaran.lk/2013/02/12/default.asp?fn=n1302129)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.