இலங்கையில் சுற்றுலா கைத்தொழிலில் காணப்படும் செழிப்பு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் இலங்கையில் அதிகரிப்பதற்கு காரணமாகலாம் என சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்தார்.
வர்த்தக சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் காரணமாக ஏற்படுகின்ற மரணத்தை முழுமையாக ஒழிக்கவேண்டும். எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகியோருக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இந்தியாவில் எச்ஐவி தொற்றுவீதம் கூடுதலாக உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் செல்கின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படாதுவிடின் பாரதூரமான விளைவுகளி ஏற்படலாம்.
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றி சிறுவர்களுக்கு பாடசாலைகளில் அறிவூட்டப்படல் வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தயார்படுத்தப்படல் வேண்டும் என்றார்.
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டத்திற்காக இலங்கைக்கு 12.6 மில்லியன் நன்கொடை கிடைத்திருக்கின்றது. பால்வினை நோய்கள் பிரிவின் ஆலோசகர் டாக்டர் கே. புத்தஹாகோறளை தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 432 ஆக இருந்ததுடன் அதனூடாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 283 ஆக இருந்தது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.