......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

இலங்கை இளைஞனை காப்பாற்ற குருதிப் பணத்தை வழங்க முயற்சி

கட்டாரில்  மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும்  இலங்கையைச் சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கரை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.


மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர் கைகலப்பு ஒன்றில் கேரளாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞரை கொலை செய்ததாக அவருக்கு கட்டாரில் டிசெம்பர் 31 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த கைகலப்பில் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை அடுத்து இலங்கை பெறுமதியில் 35 லட்சம் ரூபாவை  குருதிப்பணமாகப் பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆயினும், இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். 

அதனை அடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோ இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE