......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Friday, 1 February 2013
மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கை அணி அபார வெற்றி
By V.Priyatharshan மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பத்தாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு லீக் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணிக்கு குன் 52 ஓட்டங்களையும் ஜேன்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் கௌசல்யா, செனவிரத்ன மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை அமைக்க 50 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜெயங்கனி 62 ஓட்டங்களையும் மென்டிஸ் 46 ஓட்டங்களையும் கௌசல்யா 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணிசார்பாக எல்விஸ் மற்றும் பிரின்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் கௌசல்யா தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.