இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக மிச்சல் டி சொய்சா நியமிக்கப்பட்டள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஒரு வருட காலமாக அணியின் முகாமையாளராக இருந்த ஷரித் சேனாநாயக்கவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இம் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணியுடனா போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான ரகசிய தகவலக்களை கிரிக்கெட் சபை வெளியிட்டதையடுத்து அதன் மீதும் அணியின் முகாமையாளர் மீதான நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெய்வர்த்தனே தெரிவித்திருந்தார்
2012ம் ஆண்டின் சர்வதேச இருபது ஒவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. அப்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கவுள்ள தொகையில் இலங்கையின் 15 வீரர்களுக்கு வழங்கவேண்டிய 25 சதவிகிதத் தொகையை இத்தொடரில் பயற்சி வழங்கிய பயிற்சியாளர் மற்றும் ஏனைய ஊழியர்கள் சிலருக்கு ஊக்குவிப்புத் தொகையாக பிரித்து வழங்குமாறு மஹேல ஜெயவர்த்தனே கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்த இலங்கை கிரிக்டெட் சபை, அதனை ஊடகங்களிலிலும் பகிரங்கப்படுத்தியது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு ரகசியமான முறையில் வீரர்கள் மேற்கொண்ட
கோரிக்கையை சபை பகிரங்கப்படுத்தி வீரர்களை அவமானப்படுத்தியுள்ளது. இதனால் கிரிக்கெட் சபை மற்றும் அணி முகாமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று மஹேல கூறியிருந்த நிலையில் தற்போது அணியின் முகாமையாளர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(http://www.virakesari.lk/article/sports.php?vid=482)
ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்த இலங்கை கிரிக்டெட் சபை, அதனை ஊடகங்களிலிலும் பகிரங்கப்படுத்தியது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு ரகசியமான முறையில் வீரர்கள் மேற்கொண்ட
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.