......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

சபாநாயகருக்கு த.தே.கூ. கடிதம்

பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளது. 


அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, 

'இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமென எடுத்த தீர்மானத்தை எதிர்த்து நாம் இதை எழுதுகின்றோம். 

சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கா மற்றும் நீதியரசர் அமரதுங்கவின் தீர்ப்பு ஆகியவை நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை தெளிவாகக் கூறியுள்ளன. நீங்கள், கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அளித்த தீர்ப்பில் இதை அங்கீகரித்துள்ளீர்கள். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

'அரசியலமைப்புக்கு வியாக்கியானம் கூறும் உரிமை உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதை குழப்பக்கூடாது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் பெரும் மதிப்புடன் ஏற்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. .... நான் அரசியலமைப்பு விடயத்தில் தீர்ப்பு ஏதும் கொடுக்கலாகாது.'

இதனடிப்படையில் சட்ட முறையில் ஒரு சுயாதீனமான அமைப்பு நிறுவப்படாமல் 107 (3) உறுப்புரிமைக்கமைய நீதியரசரை பதவி விலக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எருத்திலெடுக்க முடியாது. 

இதை மதிக்காமல் தீர்மானம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாயின் அது அரசியலமைப்பை மீறுவதாக அமையும். சுட்டத்தின் ஆட்சி சீர்குலையும். இந்த நிலைமையில், தற்போது எழுந்துள்ள அரசியலமைப்பு பிரச்சினையை ஆராய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கூட்டும்படி நாம் கேட்டுக்கொள்கிறோம்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 






(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE