தெற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2013 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வீரர்கள் மீது ஆப்கான் வீரர் துப்பாக்கிச் சூடு நடத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வாறான சம்பவங்களால் 2012 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் ஆப்கானில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆப்கான் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறிய ஆப்கானில் இருக்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் பேச்சாளர் சம்பவம் குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் மூன்று வெளிநாட்டு வீரர்கள் காயமடைந்திருப்பதாக உள்ளூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கான் வீரர்களின் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் தலிபான் அமைப்பினர் இருப்பதாக கூறப்பட்டாலும் பெரும்பாலான சம்பவங்கள் தனிப்பட்டவை என்று சர்வதேச படை குறிப்பிட்டுள்ளது. தனிப்பட்ட வெறுப்பு மற்றும் கலாசார அளவிலான பிளவுகள் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை கூறியுள்ளது.
கடந்த மாதம் முதல் முறையாக ஆப்கான் பெண் பொலிஸார் ஒருவர் வெளிநாட்டு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.