பேராதெனிய பல்கலைகழகத்தில் இவ்வருடம் முதல் பகிடிவதை இடம்பெறாது என பேராதனை பல்கலைகழக உபவேந்தர் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்கலைகழகத்தின் சிரேஷ்ட மாணவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இவ்வருடம் மார்ச் மாதம் பல்கலைகழகத்திற்கு புதிதாக வரும் மாணவ மாணவிகள் பகிடிவதை சம்பந்தமாக அச்சம்கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(tamilmirrror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.