சுயாதீனமான நீதித்துறையை பாதுகாப்பதற்கு சகலரும் கைக்கோர்க்கவேண்டும். என்பதுடன் நீதித்துறை வரலாற்றில் இருண்ட சகாப்தமாகவே இந்த சகாப்தம் எழுதப்படும். என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினர் சட்டத்தரணி ரத்னவேல் தெரிவித்தார்.
நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீதித்துறையின் சுதந்திம் மற்றும் அதனை பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்தோம். பிரதம நீதியரசரை நீக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசியலமைப்பிற்கு முரணான வகையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிரதம நீதியரசரை நீக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவானது சட்டவலுவற்றதாகும். அந்த தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இது இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இருண்ட யுகமாகும் என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.