புதிய பிரதம நீதியரசர் நாளை அறிவிக்கப்படுவார் என தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
18ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்திலேயே புதிய பிரதம நீதியரசரின் பெயரை இந்த பேரவை சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த பேரவையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறுபான்மை இனத்தின் சார்பில் ஏ.எச்.எம். அஸ்வர், டிம்.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.