ரூபா 8 கோடி ஊழல்; விசாரணை ஆரம்பம்
வடமத்திய மாகாணத்தில் குளங்களை மறுசீரமைக்கும் ஒப்பந் தம் ஒன்றைப் பெற்று எட்டு கோடி ரூபா அரச நிதியை மோசடி செய்த வட மத்திய மாகாண இயந்திர உபகரண முகவர் நிலையத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக ஜனாதிபதி விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பித்ததோடு சந்தேக நபரான தலைவர் அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
குளங்களின் புனரமைப்புக்கு பெரும் தொகை பணத்தை பெற்றாலும் அந்தப் பிரிவினால் ஒரு குளம் கூட புனரமைப்பு செய்யப்படவில்லையென ஜனாதிபதி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசிடமிருந்து கிடைக்கும் நிதியை தலைவர் அவரின் பெண் ஆதரவாளர்களின் கணக்குகளில் வைப்பில் இட்டு தவறும் புரிந்துள்ளார். ஜனாதிபதி செயலரின் பணிப்பின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 25 பேரிடமிருந்து வாக்கு மூல்கள் பெறப்பட்டுள்ளன. வாக்குமூலங்கள் மூலமும் எழுத்து மூல தகவல்கள் மூலமும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணை இறுதியில் ஜனாதிபதி விசாரணை பிரிவின் அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அவரிடம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்தும் ஜனாதிபதி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. (எப். எம்)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.