......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

நாடாளுமன்றமே அரசியலமைப்பை மீறுகின்ற செயலாகும்: சுமந்திரன்

-அழகன் கனகராஜ்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவையும் அதன் அறிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுப்படியற்றதாக்கிவிட்டது. அப்படியாயின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் இல்லை. அந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இல்லை. அவ்வாறனதொரு நிலையில் அவைதொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தினால் நாடாளுமன்றமே அரசியலமைப்பை மீறுவதாக அமைந்து விடும். என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்மை வியாக்கியானம் செய்யும் உரிமை உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கின்றது. என்று சபாநாயகரே தெரிவித்துள்ளார். அதன் பிரகாரமே குற்றப்பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் அறிக்கை அரசியலமைப்பிற்கு அமைவாக இல்லை என்று; உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.

அத்துடன், தெரிவுக்குழுவையும் அதன் அறிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுப்படியற்றதாக்கிவிட்டது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையெனக்கூறி அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுமாயின் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

அதாவது நாடாளுமன்றமே அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துவிடும். ஆகையால், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்புக்களை கவனத்தில் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE